Friday, 28 September 2018

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள்


முன்னுரை:

தொன்மை காலத்தைப் பற்றி ஆய்வு  செய்தலையே தொல்லியல் அல்லது தோன்பொருளியால் என்கிறோம்.தொல்லியல் ஆய்வு இன்றேல்
மனிதன் கடந்து வந்த பாதையையும் அவன் வரலாற்றையும் அறிய இயலாது போயிருக்கும்.

தொல்லியல்:

மனிதன் தோன்றி நாடாடியாக இருந்த காலத்திலிருந்து ,வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை உள்ள காலத்தையே தொன்மை காலம் என்கிறோம்.தொன்மை காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை 
தொழில்கள் ,வணிகம், வேளாண்மை, அரசியல், நுண்கலை பற்றி கல்வெட்டுகள், கட்டிடங்கள், காசுகள், செப்பேடுகள் முதலியானவற்றை 
அடிப்படையில் ஆய்ந்தரிதல் தொல்லியளில் முதன்மையான நோக்கம் ,தொல்லியலை ஆங்கிலத்தில் "ஆர்க்கியாலஜி" என்கிறோம்


தொன்மைக்கால நிகழ்வுகளை அறிதல்:

அவ்வப்போது திட்டமிட்டுச் செயல்படும் ஆய்வுகளின் போதே ,தற்செயலாக கிடைக்கு. தடயங்கள் ,எச்சன்களின் உதவியுடன்னே
தொன்மைக்கால நிகழ்வுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிகிறார்கள்.எடுத்துக்காட்டாக ,மணிமேகலை ,சிலப்பதிகாரம், 
முதலிய இலக்கியங்களில் இடம் பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் என்கிற துறைமுகம் (சோழர்களின் கடற்கரை நகரம்)இருந்த்ததற்கான
தடயங்கள் கிடைக்கப் பெறாமல் இருந்தன .இந்திய தொல்லியல் 
துறையினர் 1963ஆம் ஆண்டு பூம்புகார் அருகில் உள்ள கீழார்வெளி என்னும் இடத்தில் மேற்கொண்ட கடல் அழாய்வின் போது கி.மு.மூன்றாம்
நூற்றாண்டைச் சார்ந்த கட்டட் இடிப்படுகள் காணப்பட்டன.
இந்த ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத்துறை ,அரைவட்ட வடிவ 
நீர்த்தேக்கம் ,பூத்தவிஹாரம் (புத்த பிக்குகள் தங்குமிடம்)வெண்கல த்தாலான புத்த பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன . இவை பண்டைய 
காவிரிப்பூம்பட்டின மக்கள் பயன்படுத்திய பொருள்கள் என்பது காவிரி 
பூம்பட்டினம் என்றொரு நகரம் இருந்தது என்பதும் வலுவான சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது .



தொல்லியல் துறை ஆய்வின் பயன்பாடு:

காவேரிப்பூம்பட்டின அகழ்வாய்வில் கிடைத்த புத்தர்சிலை  ,தூண் போன்றவை கொண்டு ,அங்கு வாழ்ந்த மக்களின் சிலர்ப்புத்த  சமயத்தை
பின்பற்றியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம் .

படகுத்துறை கட்டப்பட்டுள்ளதை நோக்கும் போது அவ்வூர் மக்கள் கடல் வாணிகம் மேற்கொண்டனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை:

அறிவியல் முன்நேற்றங்களால்  ,தற்காலத்தில் தொல்லியல் ஆய்வுகளைபி பல்வேறு புதிய தொழில் நுடப்பங்களில் உதவியுடன்
செய்யும் போது ,மிகத் துல்லியமான முடிவுகளை பெற இயல்கிறது.








No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....