மதுரைக் காண்டம்
வாழியெம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொறுப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியோடு படராப் பஞ்சவ வாழி
அடர்த்தெழு குருதி. யாடங்காய் பசுந்தணிப்
பிடர்தலைப் பீடம் எரிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கை கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சுருடைக்
கானகம் உகந்த காளி . தாருகன்
பேரூரங் கிழிந்த பொண்ணு. மல்லள்
சீற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையாள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே, என
வருக மற்றவள் தருக ஈங் கென
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குருக்கினள் சென்றுழி
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோனி மடக்கொடி யோய்எனத்
தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும் பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
எசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துறப்பச்
சுழ்கழல் மன்னா நின்னகரப் புகுந்தீங்
No comments:
Post a Comment